Home முக்கியச் செய்திகள் இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அதிரடி இடமாற்றம்

இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அதிரடி இடமாற்றம்

0

இரத்தினபுரி போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் இமேஷ் பிரதாபசிங்க, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆணவச் செயல்கள் குறித்த பல முறைப்பாடுகளை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு ஊடகவியலாளரொருவர் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்பாக முறைப்பாடு அளித்திருந்தார்.

முறைப்பாடுகள் 

அத்தோடு, பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) சார்பிலும் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு அனைத்தும் சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் அவசர சோதனைகள் பிரிவு ஆரம்ப விசாரணையைத் தொடங்கியிருந்தது.

இந்த நிலையில், வைத்தியர் பிரதாபசிங்க உடனடியாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஒழுக்காற்று நடவடிக்கை

மேலும், அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படதாகவும் இது பொதுச்சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் முன்னதாக நுவரெலியா, கம்பளை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் பணிப்பாளராக இருந்தபோதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version