‘சங்கு பிரைவேட் லிமிடெட்’, ‘மன்னார் அன்ட் கொம்பனி’ ‘சங்கு மார்க் கைலிக்கூட்டம்’.. என்று தமிழ் மக்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற அமைப்பு, கிழக்கிற்கு தேர்தல் செலவு நிதியை ஒதுக்கவில்லை என்று அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றது.
தேர்தல் செலவுகளுக்காக ஒன்று ஒரு புலம்பெயர் பெருவர்த்தகரால் கோடிக்கணக்கில் வழங்கப்பட்ட நிதியை கிழக்கில் போட்டிபோடும் வேட்பாளர்களுக்கு அந்த அமைப்பின் தலைமை வழங்காமல் கிழக்கைப் புறக்கணிப்பதாக தற்பொழுது எதிர்ப்புக்கள் கிழம்ப ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக அம்பாறை (Ampara) மாவட்டத்தில் போட்டிபோடும் வேட்பாளர்களுக்கு அடிப்படை தேர்தல் பரப்புரை நிதி கூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த விடயம் பற்றி தனது நட்பு வட்டாரத்தில் பேசிய ஒரு சங்கு பிரைவேட் லிமிடெட் வேட்பாளர்,
‘புலம்பெயர் பெருவர்த்தகர் வழங்கிய நிதியில் பெரும் பகுதி மன்னாரிலும் (Mannar), யாழிலுமே (Jaffna) செலவு செய்யப்பட்டு வருகின்றது. வடக்கில் 1000 கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்குவது போன்ற சம்பவங்களுக்கு எல்லாம் அந்த நிதி பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால் கிழக்கு முற்றாகவே புறக்கணிக்கப்படுகின்றது. கிழக்குக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதி கூட, மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டிபோடுகின்ற ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் ஒதுக்கப்படுகின்றதே தவிர, மிகுதியாவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்’ என்று மூக்கால் அழுதார்.
“தமிழ் தேசியம் என்பது வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தைத்தான் அடிப்படையாகக்கொண்டது.
தமிழ்த் தேசியத்தை பெயரில் மாத்திரம் வைத்துக்கொள்வதை விடுத்து, மனதார அதனை நேசித்துச் செயல்படவேண்டும்..” இவ்வாறு அந்த அம்பாறை மாவட்ட வேட்பாளர் கூறவில்லை.. நாங்கள் கூறுகின்றோம்.