Home இலங்கை அரசியல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: மீண்டும் இன்று கூடவுள்ள சம்பள நிர்ணய சபை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: மீண்டும் இன்று கூடவுள்ள சம்பள நிர்ணய சபை

0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள நிர்ணயத்துக்காக இன்றையதினம் (12) சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடவுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 சம்பள அதிகரிப்பை வழங்குவதாக 7 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்து சம்பள நிர்வாகச் சபையுடன் பேசவிருப்பதாகவும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான சட்டத்தை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்திருந்தார்.

1700 சம்பள அதிகரிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் கண்டி ‘கரலிய’ அரங்கத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்ற தோட்ட தொழிற்சங்கங்களின் இளம் தலைவர்களின் பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தொழில் அமைச்சராக பணியாற்றிய மனுஷ நாணயக்கார, உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ள நிலையில் அந்த பொறுப்புக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு கீழ் கொண்டுவந்துள்ளார்.எனவே அவரின் மேற்பார்வையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், 1,700 ரூபாய் நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியிலிருந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, புதிய யோசனை இன்றையதினம் முன்வைக்கப்படும் என்று செந்தில் தொண்டமான் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version