Home முக்கியச் செய்திகள் ரவி செனவிரத்னவின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்

ரவி செனவிரத்னவின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்

0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பரிசோதகரும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் (Ravi Seneviratne) சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (18.11.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“வாகன விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் வெள்ளவத்தை (Wellawatte) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிப்பட்டிருந்தார்.”

அடிப்படை மனித உரிமை

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையையடுத்து தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த மனு நிராகரிக்கபடபட்டுள்ளது.

இந்த மனுவில் காவல் நிலைய பொறுப்பதிகாரி, அதிகாரிகள் மற்றும் சட்ட மா அதிபர் காவல்துறை மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version