2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் நாளை (02.09.2024) விநியோகிக்கப்படும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்குகள் விநியோகம் 95% நிறைவடைந்துள்ளதாகவும் இராணுவ தளங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய தபால் மூல வாக்குச் சீட்டுகளில் ஒரு பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூல வாக்களிப்பு
இதேவேளை 712,318 அரச ஊழியர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான தபால் மூல வாக்களிப்பைக் குறிக்க தகுதி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.