Home சினிமா எல்லை மீறிவிட்டார்.. இயக்குநரை விளாசிய நடிகை திவ்ய பாரதி!

எல்லை மீறிவிட்டார்.. இயக்குநரை விளாசிய நடிகை திவ்ய பாரதி!

0

திவ்ய பாரதி

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சில படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்ய பாரதி.

மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

கடைசியாக இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அப்பாவானார் பிரேம்ஜி அமரன்.. கொண்டாட்டத்தில் குடும்பம்!

எல்லை மீறிவிட்டார்! 

சமீபத்தில் இயக்குநர் நரேஷ் குப்பிலி எக்ஸ் படத்தில் திவ்ய பாரதியை கேலி செய்ய்யும் வகயில் கருத்துக்களை தெரிவித்தார். தற்போது, அவரது கருத்துகளை திவ்ய பாரதி கடுமையாக கண்டித்துள்ளார்.

அதாவது, அந்த தெலுங்கு இயக்குநர் தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தமிழ் சினிமாவில் இதுபோன்ற பிரச்சினைகளை அவர் சந்தித்ததில்லை, ஆனால் இந்த குறிப்பிட்ட இயக்குநர் எல்லை மீறிவிட்டார் என்று திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version