இங்கிலாந்தில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் பணிபுரியும் போது 38 நோயாளிகளை பாலியல் அத்துமீறல் செய்ததாக மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
38 வயதான மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் மீது 15 பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள், 17 தாக்குதல் குற்றச்சாட்டுகள் மற்றும் 13 வயதுக்குட்பட்ட குழந்தை மீது ஒன்பது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவப் பணியிலிருந்து இடைநீக்கம்
2017 மற்றும் 2021 க்கு இடையில், றோயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் மற்றொரு மருத்துவமனையில் 38 நோயாளிகள் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
அவர் அடுத்த ஆண்டு நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார், மேலும் விசாரணை முடிவு வரை அவரது மருத்துவப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
