Home இலங்கை குற்றம் தென்னிலங்கையில் ஆடம்பர வீட்டுக்குள் சிக்கிய மர்மம் – நாயினால் சிக்கிய பெண்

தென்னிலங்கையில் ஆடம்பர வீட்டுக்குள் சிக்கிய மர்மம் – நாயினால் சிக்கிய பெண்

0

தென்னிலங்கையில் ஆடம்பர வீடொன்றுக்குள் சூட்சுமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் மோப்ப நாயான பெர்சியின் காட்டிக்கொடுப்புக்கு அமைய, வீட்டின் கழிவறை நீர்தொட்டிக்குள் மறைந்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

ஹிக்கடுவை, நலகஸ்தெனிய பகுதியில் உள்ள ஆடம்பரமான இரு மாடி வீடொன்றிலேயே இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சோதனை நடவடிக்கை

வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக காலி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வீட்டினை சோதனையிட்ட போது எந்தவொரு போதைப்பொருளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மோப்ப நாயின் உதவியுடன் மீண்டும் தேடதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேடதல் நடவடிக்கை

இதன்போது வீட்டின் மாடி கழிவறையின் நீர்த்தொட்டிக்குள் பொலித்தீனில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 14.8 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 39 வயதான வீட்டு உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version