நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(18.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது.
சுற்றுலாப்பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு டயானா கமகே விடுத்துள்ள எச்சரிக்கை
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (18.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.41 ரூபாவாகவும், கொள்வனவு விலை 296.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 224.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 214.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 328.82 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 383.55 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 368.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றம்
மத்திய கிழக்கு போர் பதற்றம் : இலங்கை – இஸ்ரேலுக்கு இடையில் முறுகல் நிலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |