Home உலகம் கனடாவில் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை!

கனடாவில் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலை!

0

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பெட்ரோலின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக கனேடிய மலிவு சக்தி வள அமைப்பின் தலைவர் டேன் மெக் டியாகு தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டின் பின்னர் பதிவான அளவிற்கு விலை ஏற்றம் பதிவாகும் என பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கனடாவில் பணிகளை இழக்கப்போகும் அரசாங்க ஊழியர்கள்

 பெற்றோலின் விலை

  இன்று(18)நள்ளிரவு முதல் ஒன்றாரியோ  மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 14 சதங்களாக உயர்த்தப்பட உள்ளது.

அதன்படி,ஒன்றாரியோவில் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 1.79 டொலர்களுக்கும் மேல் உயர்வடையும் சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ் !

விலை உயர்வு

குபெக் மாகாணத்தில் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 1.88 டொலர்களை விடவும் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கார்பன் வரி அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணிகளினால் இவ்வாறு விலை உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அறிமுகமாகும் ஈ-விசா! குடியேற்றவாசிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version