ஹமாஸ் அமைப்பின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இந்த வார இறுதியில் துருக்கிக்கு வருகை தரவுள்ளதாக துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார்.
“பலஸ்தீன விவகாரத்தின் தலைவர் இந்த வார இறுதியில் எனது விருந்தினராக வருவார்” என்று இஸ்ரேலின் வெளிப்படையான விமர்சகரான எர்டோகன் சட்டமியற்றுபவர்களிடம் கூறினார்.
போதைப்பொருளுடன் சிக்கிய சிறிலங்கா முன்னாள் இராணுவத் தளபதி
சந்திப்பு எங்கு நடைபெறும்
ஹனியேவை எங்கு சந்திப்பேன் என்று எர்டோகன் கூறாத நிலையில், துருக்கி அதிகாரி ஒருவர் இஸ்தான்புல்லில் உள்ள டோல்மாபாஸ் அரண்மனையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : சஜித்,அநுரவின் திட்டத்தை அம்பலப்படுத்திய கர்தினால்
ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் குரலாக இருப்பதற்கு
“பலஸ்தீனப் போராட்டத்தைப் பாதுகாக்கவும், ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் குரலாக இருப்பதற்கும் கடவுள் என் உயிரை எடுக்கும் வரை நான் தொடர்ந்து இருப்பேன்” என்று தாயிப் எர்டோகன் கூறினார், ஹமாஸை “எதிர்ப்புக் குழு” என்று அவர் அழைத்தார். ”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |