Home உலகம் பிரதமர் நெதன்யாகுவின் விடாப்பிடி : அதிகரிக்கும் போர் பதற்றம்

பிரதமர் நெதன்யாகுவின் விடாப்பிடி : அதிகரிக்கும் போர் பதற்றம்

0

இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், “இஸ்ரேல் தனது நட்பு நாடுகளின் ஆலோசனைக்கு முரண்பட்டாலும், இஸ்ரேல் தனது சொந்த முடிவுகளை எடுக்கும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்தையும் செய்யும்” என்று அவர் கூறினார்.

துருக்கி செல்கிறார் ஹமாஸ் தலைவர்

அமைச்சரவைக் கூட்டத்தில் 

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்த பின்னர் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நெதன்யாகு இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக ஜெர்மனியும், இங்கிலாந்தும் ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இஸ்ரேல், ஹிஸ்புல்லா ஏட்டிக்கு போட்டியாக தாக்குதல்

ஈரானுக்கு தக்க பதிலடி 

ஈரானுடனான எந்தவொரு கூடுதல் நேரடிப் பகைமையும் மத்திய கிழக்கில் முழுமையான போருக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளன.

இருந்தபோதும், ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்க உள்ளதாக இஸ்ரேல் உறுதியாக தெரிவித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version