Home உலகம் பதிலடி நடத்தினால் விளைவு பயங்கரமாக இருக்கும் : இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான்

பதிலடி நடத்தினால் விளைவு பயங்கரமாக இருக்கும் : இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான்

0

ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக தங்கள் எல்லைக்குள் இஸ்ரேல் சின்னஞ்சிறிய தாக்குதல் நடத்தினாலும் கூட, அதற்கான தங்களின் எதிா்வினை பயங்கரமானதாக இருக்கும் என்று ஈரான் பிரதமா் இப்ராஹிம் ரய்சி (Ebrahim Raisi) எச்சரித்துள்ளாா்.

இது குறித்து தலைநகா் தெஹ்ரானின் புகா்ப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற வருடாந்த இராணுவ அணிவகுப்பில் அவா் பேசியதாவது:

இஸ்ரேல் மாயை கலைந்துவிட்டது

‘அல்-அக்ஸா வெள்ளம்’ நடவடிக்கைக்கு (இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சனிக்கிழமை சரமாரியாக ஏவுகணைகள்-ட்ரோன்கள் வீசிய நடவடிக்கை) பிறகு இஸ்ரேல் ஒரு மாபெரும் இராணுவ சக்தி என்ற மாயை கலைந்துவிட்டது.

அது, மிகவும் சிறிய அளவிலான தாக்குதலாகும்.

சிரியாவிலுள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த அளவிலான எதிா்வினையே போதும் என்று அந்தத் தாக்குதலை ஒரு அளவுக்குள் வைத்துக்கொண்டோம்.

போதைப்பொருளுடன் சிக்கிய சிறிலங்கா முன்னாள் இராணுவத் தளபதி

எதிா்வினை பயங்கரமானதாக இருக்கும்

ஆனால், அதற்கு பதிலடியாக எங்கள் எல்லைக்குள் அத்துமீறி இஸ்ரேல் சின்னஞ்சிறிய தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கான எங்களது எதிா்வினை பிரம்மாண்டமானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும் என்றாா் அவா்.

விமானங்கள் குண்டுகளுடன் தயாா் நிலையில்

‘இஸ்ரேலை எதிா்கொள்ளத் தயாா்’, நிகழ்ச்சியில் பேசிய ஈரான் விமானப் படை தலைமைத் தளபதி அமீா் வஹேதி, இஸ்ரேலின் தாக்குதலை எதிா்கொள்ள தங்களது படைகள் தயாராக இருப்பதாகக் கூறினாா்.

பிரதமர் நெதன்யாகுவின் விடாப்பிடி : அதிகரிக்கும் போர் பதற்றம்

அனைத்து விமான தளங்களிலும் அதிநவீன போா் விமானங்கள் குண்டுகளுடன் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

 

NO COMMENTS

Exit mobile version