Home உலகம் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரை போட்டுத் தள்ளிய அமெரிக்கா…! உறுதிப்படுத்திய ட்ரம்ப்

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரை போட்டுத் தள்ளிய அமெரிக்கா…! உறுதிப்படுத்திய ட்ரம்ப்

0

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) அமைப்பின் தலைவரான அபு கதீஜா (Abu Khadijah) படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு கதீஜா என்றும் அழைக்கப்படும் அப்துல்லா மக்கிமுஸ்லிஹ் அல்-ரிஃபாய் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் மரணத்தை ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி (Mohammed Shia’ Al Sudani) உறுதி செய்துள்ளார். 

வலிமையின் வழியே கிடைத்த அமைதி

அமெரிக்காவுடன் (USA) சேர்ந்து ஈராக் மற்றும் குர்திஷ் படைகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே அபு கொல்லப்பட்டுள்ளார்.

நம்முடைய துணிச்சலான போர் வீரர்கள் தயக்கமின்றி அவரை வேட்டையாடி உள்ளனர்.

இதனுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் கொல்லப்பட்டு உள்ளார். வலிமையின் வழியே கிடைத்த அமைதி என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதலில் மற்றொரு சக்திவாய்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version