Home இலங்கை அரசியல் ரணிலை நலம் விசாரிக்க விரைந்த டக்ளஸ் தேவானந்தா

ரணிலை நலம் விசாரிக்க விரைந்த டக்ளஸ் தேவானந்தா

0

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda)சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பானது நேற்றைய தினம் (24.08.2025) இடம்பெற்றுள்ளது.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர், மருத்துவ பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை

இதனை தொடர்ந்து அவர், தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறான பின்னணியில், அவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அவரை அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் சந்தித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/ARHkUof9pjg

NO COMMENTS

Exit mobile version