இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால
அனுபவங்களை கருத்தில் கொண்டு தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு
சரியானவர்களை தெரிவு செய்வார்கள் என ஈ.பி.டி.பி.கட்சியின் செயலாளர்
நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் (25) மன்னார் தேர்தல்
அலுவலகத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கட்டுப்பணம் செலுத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மன்னார் பிரதேச
சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்த இன்றைய தினம் (25) மன்னார்
தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்தேன்.
இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால
அனுபவங்களை கருத்தில் கொண்டு, தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம்
கண்டு, சரியானவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.
மன்னாரில் இரு சபைகளில் போட்டி
அந்த வகையில் கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்களுடன் சென்று மன்னார் பிரதேச
சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளேன்.
இம்முறை மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளிலே போட்டியிட உள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் கடந்த காலத்தை போல மன்னார் மாவட்டத்தில் அனைத்து
சபைகளிலும் போட்டியிட்டு அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம்.
யாழ். மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல்
செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
