Home இலங்கை அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர் ரணிலே : டக்ளஸ் பகிரங்கம்

அனுபவம் வாய்ந்த தலைவர் ரணிலே : டக்ளஸ் பகிரங்கம்

0

சரியான ஒரு அரசியல் அல்லது தலைமைத்துவம் நாட்டில் உருவாகின்றபோதுதான் நாடும்
நாட்டு மக்களும் உயர்ச்சி பெறமுடியும் என்பதோடு, அனுபவம் வாய்ந்த தலைவர் ரணிலுக்காக வாக்குரிமையை பயன்படுத்துங்கள் என அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கான
பொதுமக்கள் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஜனநாயக ஆயுதம்

மேலும் கூறுகையில், சரியான ஒரு அரசியல் அல்லது தலைமைத்துவம் நாட்டில் உருவாகின்ற போதுதான்
நாட்டு மக்களும் உயர்ச்சி பெறுவார்கள்.

எமது நாட்டில் நேரடியாகவே நாம் கண்டுகொண்ட உண்மை இது.
அதனால்தான் நான் உங்களிடம் வெளிப்படையாகவே ஈ.பி.டி.பியுடன் எமது வழிகாட்லில்
அணிதிரளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றேன்.

நாம் கூறும் வழிமுறை ஒருபொதும்
தவறானதாக இருக்கப்போவதில்லை. இதை வலுப்படுத்த கடந்தகால வரலாறுகளும் உள்ளன.

வாக்குரிமை என்பது மக்களின் ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை நாட்டின்
முன்னேற்றத்துக்காகவும், நமது முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துவதே
காலத்தின் தேவையாக உள்ளது.

இதேநேரம் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவிட்டது.

குறித்த தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
ஏனெனில் இது நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தல்.

குறிப்பாக அனுபவமற்ற, முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளின், வெற்று
பேச்சுக்களுக்கும் போலி விளம்பரங்களுக்கும் மக்கள் இம்முறை மயங்கமாட்டார்கள்
என்பதும் உண்மை.

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

அதேநேரம் அனுபவமுள்ள, முதிர்ச்சியுள்ள, நாட்டை மீட்டெடுத்த தலைவரே உங்கள்
தேர்வாக இருக்க வேண்டும். அந்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை
நான் கூறிதான் உங்களுக்கு தெரியவேண்டும் என்றில்லை.

ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அவருடைய எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வெற்றிபெறச்
செய்ய தீர்மானத்து விட்டீர்கள்.

வரிசை யுகத்தில் நின்று வலி சுமந்த நாள்களை நாம் மறந்துவிடக்கூடாது.

அந்த
நிலையிலிருந்து மீட்டு இன்று இயல்புநிலை உள்ளதெனில் அதற்கு ஜனாதிபதி ரணிலே
காரணம்.
இதேவேளை நெருக்கடியான சூழ்நிலையிலும் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, உறுமய
திட்டம், அஸ்வெசும மற்றும் பல விடயங்களை அவர் செய்து காட்டியுள்ளார்.

எனவே, எதிர்வரும் 21 ஆம் திகதி உங்களின் வாக்குகள் அனைத்தும் ரணில்
விக்ரமசிங்கவின் எரிவாயு சிலிண்டர் சின்னத்திற்கானதாக இருப்பது அவசியம்” என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version