Home இலங்கை அரசியல் கொழும்பில் நபரை தாக்கியதாக அர்ச்சுனா எம்.பி எதிராக குற்றச்சாட்டு

கொழும்பில் நபரை தாக்கியதாக அர்ச்சுனா எம்.பி எதிராக குற்றச்சாட்டு

0

கொழும்பில் வீதி விபத்தில் ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று உத்தரவிட்டார்.

சந்தேக நபரான நாடாளுமன்ற அர்ச்சுனா 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி பேஸ்லைன் வீதியில் கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அர்ச்சுனாவுக்கு அழைப்பாணை

பின்னர் வாகனத்தில் இருந்தவரை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளனர்.

சந்தேக நபரான அர்ச்சுனா ராமநாதனை சாட்சியமளிக்க ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

இன்று முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது சந்தேக நபரான வைத்தியர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் லசந்த அபேவர்தன இன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

NO COMMENTS

Exit mobile version