Home இலங்கை அரசியல் பறிபோகுமா அர்ச்சுனாவின் எம்.பி பதவி : தொடர் சர்ச்சையில் சிக்கும் வைத்தியர்

பறிபோகுமா அர்ச்சுனாவின் எம்.பி பதவி : தொடர் சர்ச்சையில் சிக்கும் வைத்தியர்

0

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) பதவி பறிக்கப்படலாமென தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அர்ச்சுனா இராமநாதன், முறைப்படியாக அரச வேலையை விட்டு விலகாது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தில் பணியாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது. 

சட்டச்சிக்கல்

இந்தநிலைமையால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இது சட்டத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த சட்டச்சிக்கலால் அவரது பதவி நிச்சயம் பறிக்கப்படும் என சட்டவாளர்கள் சிலர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்திய சேவை

இருப்பினும், வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தற்பொழுது வைத்திய சேவையில் பணியாற்றவில்லை என்பதுடன் அவருக்கெதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த காணொளியொன்றில் தெரிவித்திருந்தார்.

இதனுடன் அவர் நாடாளுமன்றத்தின் தரவுத் தளத்தில் தான் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர் எனப் பதிவு செய்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயமும் புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு  நேற்றைய தினம் (21) ஆரம்பமான போது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் வைத்தியர் அர்ச்சுனா அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமையும் பேசுபொருளாக  சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version