Home உலகம் ஈரான் அணுமின் நிலையத்திற்கு அருகில் நிலநடுக்கம்

ஈரான் அணுமின் நிலையத்திற்கு அருகில் நிலநடுக்கம்

0

இஸ்ரேல் (Israel) – தெஹ்ரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடக்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானில் ஃபோர்டோ அணுமின் நிலையத்திற்கு அருகிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிய ஊடகங்கள் 

செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில், 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான சேத விபரங்களும் இதுவரையில் வெளியாகவில்லை. ஆனால் செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றிய பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

சோர்கேயிலிருந்து சுமார் 150 கிலோமீற்றர் (93 மைல்) தொலைவில் உள்ள தலைநகர் தெஹ்ரானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/gWis_LweIjk

NO COMMENTS

Exit mobile version