உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச்செல்வது
தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி, கத்தோலிக்க திருச்சபைக்கு எழுத்து மூல
உறுதியை வழங்கியுள்ளது.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபசக்ச வாய்மொழியாக உறுதியளித்திருந்த போதிலும்,
அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கர்தினால் மல்கம் ரஞ்சித
நினைவு கூர்ந்துள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய அதிபர் ஆணைக்குழு
சமர்ப்பித்த அறிக்கையின் எஞ்சிய பகுதிகள் கத்தோலிக்க திருச்சபைக்கு
கிடைத்துள்ளதாகவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
ரணிலின் தேர்தல் தந்திரம்! அரசியல்வாதிகளிடையே நிலவும் பீதி
மூன்று நாள் விவாதம்
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியதையடுத்து நாடாளுமன்றத்தில் புதிய மூன்று
நாள் விவாதம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடாளுமன்றம்
கூடும் எனவும், எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணைக்கு இணங்க, உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் குறித்த மூன்று நாட்களில்
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
எனினும் பயனுள்ள விவாதமாக இருக்குமா? அல்லது 45 மில்லியன் ரூபாய்களை செலவிட்ட
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனையை போன்று பயனற்றதாக அமைந்து
விடுமா என்பது தொடர்பில் சந்தேகம் எழுப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |