Home இலங்கை சமூகம் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்: லக்ஸ்மன் கிரியல்ல

சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்: லக்ஸ்மன் கிரியல்ல

0

சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து நாடாளுமன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் நீதி நிலைநாட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சீடர்களே இன்னமும் அதிகாரத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூரண விசாரணை நடத்தப்படும்

இதன் காரணமாகவே கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜெனீவா செல்வதாக கூறியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா செல்வது நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் எனவும் போர் காரணமாக இவ்வாறான பாரிய அபகீர்த்தி ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலை பறிபோகும் நிலை! அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து பூரண விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட நீதிமன்றங்களை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சிறந்த விசாரணைகள் நடத்தப்பட்டாலும் அரசியல் தலையீடு செய்யப்பட்டால் அனைத்தும் முடிந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் 

தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற தினத்தில் மூன்று தடவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புலனாய்வுப் பிரிவினர் அமைதி காத்ததாகவும் இதனால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடமிருந்து கிடைத்த தகவல்கள் கவனிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் அழிக்கப்பட்டதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

யாழில் 4000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய்!

NO COMMENTS

Exit mobile version