Home இலங்கை அரசியல் எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் : பிரதமர் ஹரிணி உறுதி

எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் : பிரதமர் ஹரிணி உறுதி

0

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எதுவும்
மறைக்கப்படாது. எந்தத் தடைகள் வந்தாலும் விசாரணைகள் தொடர்ந்து
முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து
கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

விசாரணைகள் தொடரும் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எம்மால் முன்னெடுக்கப்படும் விசாரணையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
ஏற்கின்றனரா? இல்லையா? என்பது எமக்குப் பிரச்சினை இல்லை. ஏற்பதற்கும்,
நிராகரிப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உள்ளது.

அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம்.

எனினும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இது தொடர்பில்
முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். எந்தத்
தடைகள் வந்தாலும் விசாரணைகள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version