Home இலங்கை அரசியல் அநுரவுக்கு வழங்கப்படும் இறுதி கால அவகாசம்! வெளியாகவுள்ள அரச இரகசியம்

அநுரவுக்கு வழங்கப்படும் இறுதி கால அவகாசம்! வெளியாகவுள்ள அரச இரகசியம்

0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை காலை 10 மணிக்குள் பகிரங்கப்படுத்தாவிட்டால் அதனை மக்களுக்கு நான் வெளிப்படுத்துவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

எனக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் 

மேலும், அரச இரகசியங்களை வெளிப்படுத்தும் குற்றத்திற்காக தனக்கு 14 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் உயிர்தத் ஞாயிறு தாக்குதல் அறிக்கை வெளியிடப்பட வேண்டும். போதகர் சிறில் காமினி இப்போது அச்சத்திலேயே இருக்கின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 

இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி கட்சி கத்தோலிக்க மக்களை ஏமாற்றி வருவதாக தாம் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களின் தகவல் அறியும் உரிமையை யாராலும் தடுக்க முடியாதென அவர் இதன் போது கூறியுள்ளார். 

தான் கைது செய்யப்பட்டாலும், இம்ரான் கான் சிறையில் இருந்தே தேர்தலை நிர்வகித்தது போன்று அல்லது AI தொழில்நுட்பம் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை சிறையில் இருந்து வெளிப்படுத்துவேன் என உதய கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version