Home இலங்கை அரசியல் இஸ்ரேலுக்கு எதிராக கையொப்பமிட்ட நாடுகளில் இலங்கையும் இணைவு

இஸ்ரேலுக்கு எதிராக கையொப்பமிட்ட நாடுகளில் இலங்கையும் இணைவு

0

Courtesy: Sivaa Mayuri

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் (Mohan Peiris) தெரிவித்துள்ளார்.

காசாவில் ஏற்பட்ட மனித அவலங்களுக்கு மத்தியில் அமைதி முயற்சிகளுக்காகவே இஸ்ரேலுக்கு செல்ல, ஐக்கிய நாடுகளின் செயலாளர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

பாலஸ்தீன பிரச்சினைக்கு ஆதரவு

இந்தநிலையில் இஸ்ரேலுக்கு எதிராக கையொப்பமிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் பாலஸ்தீன பிரச்சினைக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான இந்த கடிதத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கும் கடிதத்தில் பிரேசில், இந்தோனேசியா மற்றும் உகண்டா போன்ற உலகளாவிய தெற்கில் உள்ள பெரும்பாலான நாடுகளும் பிரான்ஸ், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இஸ்ரேலுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கடிதம் கையெழுத்தாகிறது.   

NO COMMENTS

Exit mobile version