Home இலங்கை அரசியல் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை சந்தித்த கிழக்கு ஆளுனர்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை சந்தித்த கிழக்கு ஆளுனர்

0

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் ( David Pine) மற்றும்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (26) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கலந்துரையாடல்

இதில் சுற்றுலாத் துறை , கடற்றொழில் மற்றும் எரிசக்தி துறைகள் குறித்து
தூதுவரும் ஆளுநரும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர்.

இதன்போது, கிழக்கு ஆளுனரால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி
வைக்கப்பட்டன.

NO COMMENTS

Exit mobile version