கிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்துவதா அல்லது முறைமையை நீக்குவதா என்று அரசு கூறவேண்டும் என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு – காத்தான்குடியில் உள்ள சுதந்திரமானதும் நீதியானதும் மக்கள்
இயக்கமான கபே அமைப்பின் காரியாலயத்தில் மாவட்ட
இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் தலைமையில் இடம்பெற்ற ஊடக
மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “சுதந்திரமானதும் நீதியானதும் மக்கள் இயக்கம் 2008 தொடக்கம் இதுவரையான
காலப்பகுதியில் இலங்கையில் நடாத்தப்பட்ட ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல்
கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானம்
அதேபோல தேர்தல் அல்லாத காலத்தில்
வாக்காளர்களுக்கு தேவையான அறிவுறுத்தல் நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின் றோம்.
அதேவேளை தேர்தல்கள் உரியகாலத்தில் நடாத்தப்படுவது தொடர்பில் ஒவ்வொரு
காலத்திலும் மிக அவதானம் செலுத்தி வருகின்றோம்.
இலங்கையை பொறுத்த ளவில் கடந்த
கால அரசியல் வரலாற்றை பார்க்கின்றபோது தேர்தல்கள் நடாத்தப்படும் காலத்தை
பார்த்தால் உத்தியோகபூர்வ கால எல்லை முடைவடைவதற்கு முன்னர் அந்த காலங்களில்
இருந்த அரசாங்கங்கள் அவர்களுக்கு சாதகமான காலங்கள் வருகின்றபோது தேர்தல்களை
நடாத்தி இருக்கின்றனர்.
அதேபோல உத்தியோக பூர்வ கால எல்லை முடிவடைந்தும் பதவியில் இருக்கும்
அரசாங்கத்துக்கு ஒரு சாதகமான காலம் வரும் வரைக்கும் பல மாதங்கள் பல வருடங்கள்
நாட்களை கடாத்திவிட்டு அந்த தேர்தல்களை தொடர்ச்சியாக பிற்போட்டு பிற்போட்டு
நடாத்தி இருப்பதை நாங்கள் அவதானித்திருக்கின்றோம்” என கூறியுள்ளார்.
