Home உலகம் கனடிய எதிர்கட்சி தலைவரின் அதிரடி கோரிக்கை: சிக்கலில் புலம்பெயர்ந்தோர்

கனடிய எதிர்கட்சி தலைவரின் அதிரடி கோரிக்கை: சிக்கலில் புலம்பெயர்ந்தோர்

0

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை கனடா (Canada) உடனடியாக நிறுத்தவேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தால் கனேடிய பணியாளர்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊதியங்கள் 

அத்தோடு, ஊதியங்கள் மீது அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார்.

இந்தநிலையில், இவ்வாறு தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை நிறுத்தினால் பாதிப்பு ஏற்படும் என கனடா பணி வழங்குவோர் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை நிறுத்தினால் கிராமப்புற சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version