Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

0

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் முன்னெதிர்வு கூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான முதலாம் காலாண்டில் 5.3 சதவீதமாக பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டாம் காலாண்டில் 4.7 சதவீதமாக பதிவாகியிருக்கின்றது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது கணிசமானளவு அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி

அதாவது இவ்வருடத்தின் ஏப்ரல் முதல் ஜுன் வரையான 3 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 சதவீதமாக அதிகரித்திருப்பதன் மூலம், பொருளாதாரம் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோன்று இக்காலப்பகுதியில் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகள் முறையே 1.7 சதவீதம், 10.9 சதவீதம் மற்றும் 2.5 சதவீதமாக உயர்வடைந்திருக்கின்றன.

இது இவ்வாறிருப்பினும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 302 ரூபாவாக பதிவாகியிருக்கிறது.   

NO COMMENTS

Exit mobile version