தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது, திருகோணமலை (Trincomalee) வெலிக்கடை தியாகிகள் அரங்கு கடற்கரை பகுதியில் நேற்று (14)இடம்பெற்றது.
அரசியல் ஆய்வாளர் ஆ. யதீந்திரா தலைமையில் இடம் பெற்ற குறித்த தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரனுக்கு (Ariyanethran) மக்கள் அமோக
வரவேற்பளித்தனர்.
பரப்புரை கூட்டம்
குறித்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பொது மக்கள் பலரும் கலந்து
கொண்டிருந்தார்கள்.
இதேவேளை, தமிழ் பொது வேட்பாளரை இழிவாகப் பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொரும் எதிர்வரும் 21ஆம் திகதி அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.