ஈழத் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரிக்கையை மூடி மறைக்கவும்,
சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவும் சிங்கள அரசின்
மறைமுக நடவடிக்கை தான் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை என மறுமலர்ச்சி தி.மு.க. தாயகம் தெரிவித்துள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக
வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்
பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் உள்ளிட்ட பலர் விடுத்துள்ள கூட்டறிக்கை இந்த விடயம் குறிப்பிடப்படுகின்றது.
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணி என்ற பெயரில் ஒரு அமைப்பு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யும்
வகையில், தமிழீழ மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்களைத் தர வேண்டும் என்று ஒரு
போலி நாடகத்தை நடத்த முனைந்து, இந்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர
வேண்டும் என்று ஒரு கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
விசாரணை
இந்தப் பின்னணியை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், இந்திய நாட்டில் உள்ள
அரசியல் கட்சிகளும், உலக நாடுகளும் உணர்ந்து ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான நீதி
விசாரணையை நடத்த முன்வர வேண்டும்.
சுதந்திரத் தமிழீழத்துக்கு ஐ.நா.
மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழர்
காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும்.
ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்
என்றும் அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய தமிழகத்தில் உள்ள தமிழர்களும்,
புலம்பெயர் வாழ் தமிழர்களும் கடமையாற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டறிக்கையின்
வாயிலாக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம் என்றுள்ளது.
