விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற இருக்கிறது. அந்த படத்திற்க்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஜனவரி 3ம் தேதி பராசக்தி இசை வெளியீட்டு விழா நேரு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக தெரிகிறது.
ரஜினி – கமல்
அந்த விழாவுக்கு ரஜினி – கமல் ஆகியோர் கெஸ்ட் ஆக வர போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் துணை முதலவர் உதயநிதி ஸ்டாலினும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறாராம்.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் பராசக்தி படத்தை ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கலைஞர் டிவி சாட்டிலைட் உரிமையை வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
