Home இலங்கை பிரித்தானியாவின் அரசியல் செல்வாக்கு: கால்தடம் பதித்த ஈழத்தமிழ் பெண்கள்

பிரித்தானியாவின் அரசியல் செல்வாக்கு: கால்தடம் பதித்த ஈழத்தமிழ் பெண்கள்

0

பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், ஈழத் தமிழ் பெண்னொருவர் லேபர் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், உமா குமரன் (Uma Kumaran) என்னும் பெண்மணியே இவ்வாறு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள தொகுதியானது லேபர் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அதிக வெற்றிவாய்ப்புக்களை கொடுக்கும் தொகுதியாக எதிர்பார்க்கப்படுகின்றது.

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

அதிக வெற்றி வாய்ப்பு

இதன் காரணமாக உமா குமரனுக்கு அதிக வெற்றி வாய்ப்புக்கள் இருப்பதாகவும், எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்று நாடாளுமன்றம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள உமா குமரனுக்கு கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் போது பாப்பரசர் பிரான்ஸிஸை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் நிலைப்பாடு

ஈழத் தமிழ் பெண்மணிகள்

அத்தோடு தங்கம் டெபோனையர் (Thangam Debbonaire) எனும் தமிழ் பெண்ணொருவரும் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இவர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இதற்கு முன்னரும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை இவர் வெற்றியீட்டுவாராயின் கெபினட் அந்தஸ்த்துள்ள மந்திரியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இவரும் ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவர் என்பதுடன் லேபர் கட்சியின் முக்கியஸ்தராகவும் திகழ்வதுடன் இவர் கெபினட் அந்தஸ்த்துள்ள மந்திரியாக வருவது ஈழத் தமிழர்களின் அரசியல் நகர்வுக்கு மிகப் பெரிய பலமாகவும், வலுச் சேர்க்கும் ஒன்றாகவும் இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.  

சினோபெக் எரிபொருள் விலைகளிலும் வீழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

NO COMMENTS

Exit mobile version