தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனை
ஆதரித்து யாழ்.அச்சுவேலி பகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது.
நேற்று (12) இரவு அச்சுவேலி, கதிரிப்பாய் முரசொலி சனசமூக நிலைய முன்றல்
குறித்த தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்
பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா,
யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், வடக்கு மாகாண
சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்
முன்னாள் தவிசாளர் தி.நிரோஸ், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் க.தர்ஷன்,
பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.