Home இலங்கை அரசியல் வேட்பாளர்களுக்கான செலவுத் தொகை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

வேட்பாளர்களுக்கான செலவுத் தொகை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடக் கூடிய தொகை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அது தொடர்பான செய்திக் குறிப்பொன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது.

ஆகக்குறைந்த செலவுத் தொகை

அதன் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் அதிகூடிய செலவுத் தொகையும், வன்னி மாவட்ட  வேட்பாளர்களுக்கு ஆகக்குறைந்த செலவுத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் கட்சியின் செயலாளர், சுயேட்சைக் குழுத் தலைவர் மற்றும் வேட்பாளர் ஆகியோரின் கையொப்பம், சத்தியப் பிரமாண ஆணையாளர் அல்லது சமாதான நீதவானால் சான்றளிக்கப்பட்ட செலவு குறித்த ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 21 நாட்களுக்குள் குறித்த செலவுக் கணக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version