Home இலங்கை அரசியல் 72 மணிநேரத்தில் அதிபர் தேர்தலை முடிவு செய்யப்போகும் தேர்தல் ஆணையம்

72 மணிநேரத்தில் அதிபர் தேர்தலை முடிவு செய்யப்போகும் தேர்தல் ஆணையம்

0

அடுத்த அதிபர் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

எதிர்வரும் வாரம் 17ஆம் திகதி புதன்கிழமைக்குப் பின்னர் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும்.

அதன் பின்னர் ஆணைக்குழு கூடி தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானித்த பின்னர் அதிபர் தேர்தலை அறிவித்து வேட்புமனுக்களை அழைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுகிறது.

வேட்பு மனுக்கள் 

மேற்படி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் வேட்பு மனுக்கள் பெறுதல் முடிவடையும் மற்றும் வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நாளிலிருந்து நாற்பத்தி இரண்டு நாட்கள் காலாவதியாகும் முன் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

NO COMMENTS

Exit mobile version