எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம்(ranil wickremesinghe) வலியுறுத்தப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க(prasanna ranatunga) தெரிவித்தார்.
அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது குறித்து தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு பொருத்தமான நபர் தமது கட்சியில் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெற்றிக்காக தன்னை அர்ப்பணிக்கவேண்டும்
தற்போதைய அதிபர், அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், தனது தகுதியை அறிந்த ஒரு நபராக தனது வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாகவும் இருக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கம்பகா உடுகம்பொல பிரதேசத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.