Courtesy: Sivaa Mayuri
அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணிக்கையின் போது, அதிகாரிகளின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழு ( Election Commission) மறுத்துள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake), விருப்பு வாக்குகளை எண்ணும் நிகழ்வைக் காண தமது கட்சி உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சிப் பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்கள்
வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் கட்சிப் பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் போது, அந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள மற்ற அனைத்து அதிகாரிகளைப் போலவே, அவர்களும் நீண்ட செயல்முறை முழுவதும் எண்ணும் மையங்களில் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் என்று ரத்நாயக்க கூறியுள்ளார்.
வாக்கு எண்ணும் மையங்களில் அதிகாரிகளின் நடத்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ரத்நாயக்க, வாக்கு எண்ணும் மையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று வருவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள்
அந்தவகையில், தேர்தல் அதிகாரிகளை நடத்துவது தங்களின் அதிகாரிகளின் பொறுப்பு என்றாலும், கட்சி பிரதிநிதிகளை நடத்துவது அந்தந்த அரசியல் கட்சியிடம் உள்ளது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
எனவே, விருப்பு வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ஒவ்வொரு பிரதிநிதியின் பிரசன்னத்தையும் விசாரிப்பது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பல்ல என ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இருப்பு தேவைப்படாதவர்கள் இருந்தால், அவர்களை தாம் வளாகத்திலிருந்து அகற்றமுடியும் என்று சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.