Home இலங்கை அரசியல் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை

ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை

0

வாக்கெடுப்பு நிலையங்களுக்கு தொலைபேசி, ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிராக நடவடிக்கை

அதற்கமையை வாக்கெடுப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் நடைமுறையில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், வேட்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை இன்று (12) நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/election-commission-important-announcement-1731389170

NO COMMENTS

Exit mobile version