Home இலங்கை அரசியல் எதிர்வரும் 3 மாதங்களில் அரசியல் ரீதியில் நிகழவுள்ள பாரிய மாற்றம்: சரித ஹேரத் வெளிப்படுத்தும் விடயம்

எதிர்வரும் 3 மாதங்களில் அரசியல் ரீதியில் நிகழவுள்ள பாரிய மாற்றம்: சரித ஹேரத் வெளிப்படுத்தும் விடயம்

0

எதிர்வரும் 3 மாதங்களில் அரசியல் ரீதியில் பாரிய மாற்றம் நிகழும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் (Charitha Herath) தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தலை பிற்போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக பாரிய போராட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை பிற்போடும் முயற்சி

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தற்போதைய ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார்.

ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள்.

ஜூலை 17ஆம் திகதியின் பின்னர் தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துவிடும்.

எனவே தேர்தலை தாமதப்படுத்துவதற்கு நாடாளுமன்றின் ஊடாக ஏதேனும் சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டால் அது முறியடிக்கப்படும்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எதிர்வரும் 3 மாதங்களில் அரசியலில் ரீதியில் பாரிய மாற்றம் நிகழும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version