Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் சடுதியாக அதிகரித்த மரக்கறி விலை

இலங்கையில் சடுதியாக அதிகரித்த மரக்கறி விலை

0

இலங்கையின் (Sri lanka) பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 முதல் 750 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக பாவனையாளர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் ஒரு கிலோகிராம் கறி மிளகாய் 500 முதல் 650 ரூபாய் வரையிலும், பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளதுடன் ஏனைய மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்ந்த நிலையில் உள்ளதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாரிய அதிகரிப்பு 

இதேவேளை ஒரு கிலோ கிராம் கரட் 460 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் வெண்டைக்காய் 500 ரூபாவிற்கும், இஞ்சி ஒரு கிலோ 3,500 ரூபாவிற்கும், தேசிக்காய் ஒரு கிலோ 1,800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, கடந்த நாட்களில் 100 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் இன்று 300 முதல் 500 ரூபாவைக் கடந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை

கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளதால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது நுகர்வோரின் தேவைக்கு ஏற்ற வகையில் மரக்கறிகள் வரத்து இல்லாததால் காய்கறிகளின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version