Home இலங்கை அரசியல் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

0

“புதிய அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13ஆவது திருத்தம் உட்பட தற்போதைய
அரசமைப்பை முழுமையாக
நடைமுறைப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தி/ ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சகலருக்கும் வெற்றி’ என்ற தலைப்பில் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல்’ என்ற உப தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் பின்வருமாறு,

அரசமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு
வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியால் ஒருதலைப்பட்சமாக மீண்டும்
பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்பதுடன் மாகாண மட்டத்தில்
மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை
நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.

இலங்கையின் அரசமைப்பு

எந்த வகையிலும் இனவாதம், தீவிரவாதம் அல்லது பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படாது. ஒவ்வொரு குடிமகனும் இனம், மதம், சாதி, வர்க்கம் அல்லது பாலினம் ஆகியவற்றைப்
பொருட்படுத்தாமல் சட்டத்தின கீழ் சமமாக நடத்தப்படுவார்.

இலங்கையின் தற்போதைய அரசமைப்பின கீழ் தேவையான முறையில் மும்மொழிக் கொள்கையை
நடைமுறைப்படுத்துவோம்.

பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும்போது அனைத்து நிறுவனங்களிலும் பெண்கள் மற்றும்
இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு சட்டத்தை உருவாக்குவோம்,

மதத் தலைவர்கள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசியல்
கட்சிகள் மற்றும் சிவில் சமூக
உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து முறையாக கருத்துக்களைப் பெற்று தற்போதைய
அரசமைப்பை மாற்றி புதிய அரசமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி/ ஐக்கிய
மக்கள் கூட்டணி அர்ப்பணிப்புடன் உள்ளது.

இந்த செயல்முறையில் எமது கொள்கை என்னவென்றால் தற்போதைய அரசியல் முறையை ஒரே
நாட்டுக்குள் 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச
அதிகாரப் பகிர்வுடன் கூடிய நாடாளுமன்ற முறைமைக்கு மாற்றுவதாகும்.

முடிவெடுக்கும் செயல்முறையில் குடிமக்களைச் செயலில் ஈடுபடுத்த, கிராம அரசு
மற்றும் நகர அரசு எனப்படும் சமூக அடிப்படையிலான ஜனநாயக நிறுவனங்கள்
உருவாக்கப்படும்.

புதிய அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13ஆவது திருத்தம் உட்பட தற்போதைய
அரசமைப்பை முழுமையாக
நடைமுறைப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்

அரசமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியால்
ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது
என்பதுடன், மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை
வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும்
உறுதிப்படுத்துவோம்.

தேசிய அரசு நிறுவப்படும் பட்சத்தில் அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க
அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு ஆற்றலை
வழங்கும் அரசமைப்பு ஏற்பாடுகள் இரத்துச் செய்யப்படும்.

தேசிய அரசு நிறுவப்பட்டாலும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பிலான வரையறை
ஏற்புடையதாக இருக்கும்.

6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். மேலும் அதிகபட்ச நிதி
திறன் மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயற்படுவதை உறுதி செய்ய விரைவான
நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல்போனோர் அலுவலகம் மற்றும்
இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களைத்
திறம்படச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம்.

பாதுகாப்புத்
தேவைகளுக்குத் தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின்
உரிமையாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்படும். அரச ஆதரவுடன் மக்கள் தொகை
மாற்றங்கள் செய்யப்படாத கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.

மேலும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பு மற்றும்
மேம்பாட்டிற்காக முதலீடு செய்ய விசேட சலுகைகள் மற்றும் ஊக்கத் தொகைகள்
வழங்கப்படும்.

சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கை

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், சமூக மேம்பாட்டுப் பணிகள் மற்றும்
நிலைபெறுதகு பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டமைக்கவும் அபிவிருத்தி
செய்யவும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதி செய்வதற்கு ஒரு சர்வதேச
ஒத்துழைப்பு மாநாட்டை ஏற்பாடு செய்வோம்.

சட்டவிரோதமாக தள்ளிப்போடப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடத்தத்
தேவையான சட்ட மற்றும்
நிர்வாக நடவடிக்கைகளை எடுப்பும்.

நீதித்துறை நிர்வாகத்தில் நிறைவேற்று
அதிகாரத்தின் தலையீட்டைத் தடுக்க
சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும்
செயல்திறனை நிறுவத் தேவையான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வோம் என்றுள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version