யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் தேர்தல்
கண்காணிப்பு பணிகள் தீவிரமாக இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர்
பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிஸார் பல குழுக்களாக இணைந்து கண்காணிப்பு,
மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதேவேளை, வடமராட்சியில் நாளைய தேர்தலுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன.
சுயேட்சை குழுக்கள்
கட்சிகள், மற்றும் சுயேட்சை குழுக்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மற்றும்
விளம்பரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.