Home இலங்கை அரசியல் பொதுக்கட்டமைப்பினருக்கு திருந்த வாய்ப்பளிக்கும் தேர்தல் முடிவு: தமிழ் எம்.பி உறுதி

பொதுக்கட்டமைப்பினருக்கு திருந்த வாய்ப்பளிக்கும் தேர்தல் முடிவு: தமிழ் எம்.பி உறுதி

0

தமிழ் பொதுக்கட்டமைப்பினர் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பினை தேர்தல் முடிவுகள் நிச்சயம் உணர்த்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் (Vino Noharathalingam) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வினோ நோகராதலிங்கம், “முன்னர் நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எனது கட்சி ஒரு முடிவு எடுத்திருக்கலாம்.

தேர்தல் முடிவு

என்னைபொறுத்தவரை எடுத்த முடிவில் மாற்றம் இல்லை.

பொதுவேட்பாளருக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யப்போவதில்லை. அவருக்கு ஆதரவில்லாத நிலைப்பாடுகள் அங்கத்துவ கட்சி உறுப்பினர்களிடத்திலும் உள்ளது.எமது கட்சி உறுப்பினர்களிடத்திலும் இருக்கிறது.

கட்சி எடுத்த முடிவுசரியோ தவறோ என்பதற்கு அப்பால் தனிப்பட்ட ரிதீயிலே இந்த முடிவோடு நான் இணங்கவில்லை. மக்களால் விரும்பம்படுகின்ற மக்கள் தேர்தெடுத்த முடிவாக இதனை நான் கருதவில்லை.

தேர்தல் முடிவுகளிற்கு பின்னர் இந்தபொதுக்கட்டமைப்பில் உள்ளவர்கள் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பை இந்த தேர்தல் நிச்சயமாக கொடுக்கும்.

சரியான முடிவு

குறிப்பாக தேர்தலில் நிற்கும் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் மக்கள் மனங்களிலே இருக்கின்றது. மக்கள் தீர்க்கமான சரியான முடிவை எடுப்பார்கள்.பெரும்பாண்மையான மக்கள் எடுத்த முடிவிற்கு ஆதரவாக நானும் செயற்படுவேன்.

இதேவேளை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் பலதடைவைகளுக்கு மேல் சந்தித்திருக்கின்றேன்.

வன்னி மாவட்டத்தினுடைய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கங்கள் சம்மந்தமாக அவருடன் கலந்துரையாடியுள்ளேன்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version