ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றிக்காக பதினொரு உறுப்பினர்கள் அவரோடு கைகோர்க்க உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் எஷ்.பி.திஷாநாயக்க (S. B. Dissanayake) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 85 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் .
ஜனாதிபதி தேர்தல்
இம்முறை சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய
பதினொரு பேரைத் தவிர ஏனைய அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ளனர்.
இதுவரையில் திகாம்பரம் கட்சியின் செயற்பாடுகளை விரும்பாத பதினொரு உறுப்பினர்கள்
ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக கைகோர்க்க தயாராக
உள்ளனர்.
இந்த அனைத்து விடயங்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி
உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்கட்சிக்கு சென்றுள்ள 21 பேர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
ரணிலுக்கு ஆதரவு
ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்து
14பேர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் வந்துள்ளனர் இன்னும்
ஆறுபேர் இருக்கிறார்கள் அவர்கள் மெதுவாக வந்து இணைய உள்ளனர்.
அதேபோல் சிறிலங்கா சுதந்திர கட்சி முழுமையான ஆதரவினை ரணிலுக்கு
வழங்கியுள்ளது.
திகாம்பரம் கட்சியில் உள்ளவர்கள் அதிகமானோர் எம்மோடு இணைந்து
கொள்வதற்கு தயாராக உள்ளனர் அது தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது” என குறிப்பிட்டார்.