Home முக்கியச் செய்திகள் ஜனாதிபதி தேர்தலில் இடையூறு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!

ஜனாதிபதி தேர்தலில் இடையூறு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!

0

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் இடையூறு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை தேர்தல் ஆணைக்குழு (ECSL) தெரிவித்துள்ளது.

அத்துடன், வாக்குச்சாவடிகளில் கலவரங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விசேட சுற்றிவளைப்பு

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மற்றும் பாதாள உலகக் கூட்டத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) தெரிவித்துள்ளது.

மேலும், இதற்காக விசேட குழுக்களும் நியமிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version