எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என மின் பாவனையாளர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் 30 வீதத்தினால் குறைக்கப்பட வேண்டுமென ஒன்றியம் தெரிவித்துள்ளது.
உரிய முறையில் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் நாடு முழுவதிலும் மின்சாரப் பயனர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
பரிந்துரை
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரது அரசாங்கமும் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதாக தேர்தல் மேடைகளில் உறுதி வழங்கியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் கட்டணக் குறைப்பு மேற்கொள்ள முடியும் என கூறிய இலங்கை மின்சாரசபை தற்பொழுது கட்டண குறைப்பினை மேற்கொள்ள முடியாது என எவ்வாறு கூற முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீர் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாகவும் இவ்வாறான ஓர் பின்னணியில் ஏன் அரசாங்கத்தினால் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, தற்போதைய மின்சாரக் கட்டணங்கள் எதிர்வரும் ஆறு மாதங்கள் வரையில் தொடர வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இந்த பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது.