Home இலங்கை பொருளாதாரம் மின்சார கட்டண நிவாரண துணை மதிப்பீட்டுக்கு நாடாளுமன்ற அனுமதி

மின்சார கட்டண நிவாரண துணை மதிப்பீட்டுக்கு நாடாளுமன்ற அனுமதி

0

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 17,213 மில்லியன் ரூபாய் நிதி நிவாரணத்தை வழங்குவதற்கான துணை மதிப்பீடு இன்று (23) நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் எதுவுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்காக வரிசை அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், ஆண்டு இறுதி வரை பயன்படுத்தப்படாது என அடையாளம் காணப்பட்ட நிதி ஒதுக்கீடுகளிலிருந்து இந்தத் துணை மதிப்பீட்டுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி ஒதுக்கீடுகளை மாற்றுவதன் மூலம் 2025ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொத்த செலவு வரம்பிற்கோ அல்லது அரசாங்கத்தின் அதிகபட்ச கடன் பெறும் வரம்பிற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 (திருத்த) சட்டமூலம்

இந்தத் துணை மதிப்பீடு நேற்று (22) அரசாங்க நிதி தொடர்பான குழுவில் விவாதிக்கப்பட்ட பின்னர், அதற்கு குழுவின் அனுமதி கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஏற்றுமதி விவசாயத்தை மேம்படுத்துதல் (திருத்த) சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் எந்தவித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/electricity-bill-relief-approved-paeliment-correc-1790248440

NO COMMENTS

Exit mobile version