Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி தேர்தலில் இலத்திரனியல் வாக்கு முறை : ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலில் இலத்திரனியல் வாக்கு முறை : ரணில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

இலங்கையின் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் (Local Government Election) இலத்திரனியல் வாக்கு முறையைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

“நாட்டின் எதிர்காலத்தை குறியீடாக்குதல்” எனும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான சந்திப்பு நேற்று (22) பத்தரமுல்லையில் இடம்பெற்றது.

இதன்போது தேர்தலுக்காக அரசாங்கம் பாரியதொரு நிதியினை செலவு செய்கின்றது. உங்கள் தலைமையின் கீழ் இலத்திரனியல் வாக்கு முறையினை அறிமுகப்படுத்த முடியாதா? என தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

தேசிய தேர்தல்கள் 

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி “அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்னாள் நீதியரசர் டெப் இனது தலைமையில் இதற்காக ஆணைகுழு ஒன்று நிறுவினோம்.

முதலில் நாம் அதனை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பரிசீலனை செய்து பார்ப்போம். பின்னர் தேசிய தேர்தல்களில் அதனை நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version