Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் நடைபெற்ற அவசரக் கலந்துரையாடல்!

எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் நடைபெற்ற அவசரக் கலந்துரையாடல்!

0

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அவசரக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்த கலந்துரையாடல் இன்று (20) நண்பகல் 12:00 மணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

பிரேரணை தொடர்பான பிரச்சினைகள்

இக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலக தலைமை தாங்கியுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் போது புலனாய்வு தகவல்களை முறையாகக் கையாளவில்லை எனக் குற்றஞ்சாட்டி, அன்றைய கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாகப் பணியாற்றியவரும் தற்போதைய பாதுகாப்பு பிரதியமைச்ருமான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று 31 எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான இன்றைய அவசர கூட்டத்தில், பிரேரணை தொடர்பான தற்போதைய பிரச்சினைகள், அரசாங்கத்தின் பிரதிபலிப்பு மற்றும் நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

NO COMMENTS

Exit mobile version